புனித செபஸ்தியார் வரலாறு
விசுவாசத்தைக் கட்டிக்காக்க வீர மரணமடைந்து, விண்ணுலகப் பேரின்ப வாழ்வை தன் உடைமையாக்கிக் கொண்ட வீரப் பெருமகன் புனித செபஸ்தியார்ளூ பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நர்போன் நகரில் பிறந்து, இத்தாலியிலுள்ள மிலான் நகரில் வளர்ந்து, வனப்பமிக்க வாலிபனாகத் திகழ்ந்தார். கிறிஸ்துவுக்குப் பின் சுமார் 283 ஆண்டில் உரோமைப் பேரரசன் கறினுசின் படையில் செபஸ்தியார் சேர்ந்து, சிறந்தது ஒரு படைவீரன் ஆனார். வேதத்திற்காக சிறைக்கூடங்களிலே அடைபட்டு வேதனைபட்டுக் கொண்டிருந்த விசுவாசிகளை சந்தித்தார். அன்பொழுக அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கிறிஸ்துவின் அன்பைக் காட்டி, வீர உரைகளை ஊட்டி விசுவாசத்தில் அவர்கள் நிலைத்து நிற்கச் செய்தார். கிறிஸ்தவர்களுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல் பரிந்த அவர் தனது உயர் பதவியையும், உடைமைகளையும் பெரிதென எண்ணவில்லை. சிறையில் வேதனையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மாற்குஸ், மார்செல்லியானுஸ் என்ற இரு சகோதரர்கள் வேதவிசுவாசத்தில் தத்தளித்துக் கொண்டிருந்ததை அறிந்த செபஸ்தியார், அவர்கள் இருந்த சிறைக்கு விரைந்து சென்று விசுவாசத்தில் அவர்கள் நிலைத்து நிற்கும்படி செய்தார். இந்...